பேர் வச்சாலும் பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மைக்கேல் மதனா காம ராஜன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை மக்கள் பாடல்களை கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற “பேர் வச்சாலும்” பாடலும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரீ கிரியேட் செய்து டிக்கிலோனா படத்திற்கு கொடுத்தார். அதுவும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின்போது ‘பேர் வச்சாலும்’ பாடல் உருவான விதம் குறித்து இளையாராஜா பேசியுள்ளார்.
அதில் “இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவும், கமல்ஹாசனும் இப்பாடல் உருவாக்கத்தின்போது ஸ்டுடியோவுக்கு வந்திருந்தார்கள். ட்யூன் போட்டு முடித்துவிட்டோம். கவிஞர் வாலியை அழைத்து ட்யூனைப் பாடிக் காட்டினேன். அதற்கு அவர் இப்படியெல்லாம் பாடிக் காட்டினால் எப்படிப் பாட்டு எழுதுவது என்று கேட்டார்.
உடனே நான் ‘துப்பார்க்குத் துப்பாய ’ என்று தொடங்கும் குறளை அந்த ட்யூனுக்கு ஏற்றபடி பாடிக் காட்டினேன். அந்தக் குறளில் இருக்கும் அழுத்தம் அந்தப் பாடலில் இருக்க வேண்டும் என்று கூறினேன். இப்படி உருவானதுதான் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல்”. என கூறியுள்ளார். இந்த வீடியோவை இசையமைப்பாளர் யுவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…