நடிகை நயன்தாரா தன்னையும் மறந்து கண் கலங்கி அழுது இயக்குநரின் காலில் விழுந்து கையெடுத்துக் கும்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் பல மலையாள படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார். தற்போது ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார்.
அந்த வகையில் தெலுங்கில் 2011ல் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். இந்த படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் நயன்தாராவின் மீது பல்வேறு எதிர்ப்புகள் நிலவி வந்த போதிலும் படப்பிடிப்பை மிக சிறப்பாக முடித்து கொடுத்தார். அதனையடுத்து படக்குழுவினர் ஷூட்டிங் முடிந்த தினத்தன்று அவரின் மீது மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். இதனால் நயன்தாரா தன்னையும் மறந்து கண் கலங்கி அழுது இயக்குநரின் காலில் விழுந்து கையெடுத்துக் கும்பிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இவர் அப்போது பிரபுதேவா அவர்களை திருமணம் செய்ய முடிவெடுத்து சினிமாவை விட்டு விலகும் கடைசி நாள் என்பதால் தான் நயன்தாரா அழுதார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…