ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டரில் கடைசியாக பயணித்த வீடியோ காட்சி…

Iran Prime minister Ebrahim raisi

சென்னை: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் – அர்பைஜான் எல்லை பகுதியில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இப்ராஹிம் ரைசி உடன் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி உள்ளிட்ட விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டனர் என அறிவிக்கப்பட்டது.

ஈரான் – அர்பைஜான் எல்லை பகுதியில் நடைபெற்ற அணை திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டரில் திரும்பும் வழியில் அடர் பனி காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் இந்த விபத்து நேர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

17 மணி நேர தீவிர தேடலுக்குப் பிறகு மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த இடத்தை கண்டுபிடித்து, தற்போது ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடல் மீட்கப்பட்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி , இறுதியாக விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் இருப்பது பதிவாகியுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாது, பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்