வீடியோ :பெண் செய்தியாளர் பின்னால் தட்டிய ஓட்டப்பந்தய வீரர் ..!
- ஒட்டப்பந்தத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்த செய்தியாளர் அலெக்ஸ் என்பவரின் பின்புறத்தில் ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் அறைந்துவிட்டு சென்றார்.
ஜார்ஜியாவின் சவன்னாவில் ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு ஓடும் பந்தயத்தை நடத்தினர். அதில் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண் செய்தியாளர் ஒட்டப்பந்தத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது சிலர் கேமராவில் முன் வந்து கைகளை தூக்கி காட்டி கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்த ஒரு ஓட்டப்பந்தய வீரர் பெண் செய்தியாளர் அலெக்ஸ் அவரின் பின்புறத்தில் அறைந்துவிட்டு சென்று விட்டார்.
To the man who smacked my butt on live TV this morning: You violated, objectified, and embarrassed me. No woman should EVER have to put up with this at work or anywhere!! Do better. https://t.co/PRLXkBY5hn
— Alex Bozarjian (@wsavalexb) December 7, 2019
இதை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அலெக்ஸ் போஜார்ஜியன் அவரைக் கண்டித்து, ஒரு பதிவு பதிவிட்டார்.அதில் இன்று காலை லைவ் டிவியில் என் பட் அடித்தவருக்கு, நீங்கள் எல்லை மீறிவிட்டீர்கள் , என்னை சங்கடப்படுத்தினீர்கள்.எந்தப் பெண்ணும் இதை வேலையிலோ அல்லது எங்கும் சமாளிக்க வேண்டியதில்லை.! சிறப்பாகச் செய்யுங்கள். என பதிவிட்டு இருந்தார்.
புகைப்படத்தை வைத்தும் , ரேஸ் எண்ணை வைத்தும் அந்த நபரை அவரைக் கண்டுபிடித்து விடலாம் என அதிகாரிகள் கூறினர். இருப்பினும்அவர் யார் என்பதை அதிகாரிகள் இன்னும் கூறவில்லை.