கடுமையான கட்டுப்பாடுகளுடன் பிரமாண்டமாக நடைபெற்ற விக்கி கௌஷல் – கத்ரீனா கைஃப் திருமணம்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைஃப் விக்கி கௌஷல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தின் மதோபர் மாவட்டத்தில் உள்ள சவாய் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிக்ஸ் சென்சஸ் என்ற பழம்பெரும் கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இவர்களது திருமணம் பஞ்சாப் முறைப்படி ஆடல் பாடலுடன் நடைபெற்றது. கடந்த ஆறாம் தேதி திருமணம் நடைபெறும் இடத்திற்கு நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கியின் உறவினர்கள் வந்தனர். 8-ஆம் தேதி மருதாணி வைத்தல் சடங்கு நடைபெற்றது. 9-ஆம் தேதி திருமணத்திற்கான முக்கிய பாலிவுட் பிரபலங்கள் வந்தடைந்தனர். அன்று மாலையில் திருமணம் நடப்பதாக முகூர்த்தம் குறிக்கப்பட்டது.
இதனையடுத்து, மணமகன் 7 வெள்ளை குதிரைகள் பூட்டிய வண்டியில் திருமணம் நடக்கும் இடத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டத்துடன் ஊர்வலமாக வந்தார். அதனைத் தொடர்ந்து மணமகள் கத்ரீனா கைஃப் அலங்கரிக்கப்பட்ட காரில் தனது சகோதரனுடன் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்தார் இவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இந்த திருமண விழாவில் பத்திரிகையாளர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
கத்ரீனாவும் விக்கியும் தங்கள் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அமேசான் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பு திருமணத்திலிருந்து எந்த வீடியோவும் கசிந்துவிடாது கூடாது என்பதற்காக கத்ரீனாவும் விக்கியும் தங்கள் விருந்தினர்களை அது சமந்தமான ஒப்பந்தகளில் கையெழுத்திட வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, தங்கள் திருமண புகைப்படங்களை முதல் முறையாக கத்ரினா கைப் – விக்கி கவுசல் தம்பதி தங்களது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் இன்னும் சில நாட்களில் மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…