Muhammad Mukhbar [file image]
சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில், ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக இன்று காலையில் இருந்து தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது ஈரானின் உச்ச தலைவர் கமேனி அதிகாரப்பூர்வமாக ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.
இது குறித்து கமேனி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, துணைத் தலைவர் முஹம்மது முக்பர் இடைக்கால தலைவராக இருப்பார். அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக சட்டமன்ற மற்றும் நீதித்துறைக் தலைவர்களுடன் சேர்ந்து அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு தயராக இருக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…