ஈரானின் புதிய அதிபராகிறார் முஹம்மது முக்பர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Muhammad Mukhbar

சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி  உயிரிழந்த நிலையில், ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழலில், ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக இன்று காலையில் இருந்து தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது ஈரானின் உச்ச தலைவர் கமேனி அதிகாரப்பூர்வமாக ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.

இது குறித்து கமேனி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்  ” அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, துணைத் தலைவர் முஹம்மது முக்பர் இடைக்கால தலைவராக இருப்பார்.  அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக சட்டமன்ற மற்றும் நீதித்துறைக் தலைவர்களுடன் சேர்ந்து அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு தயராக இருக்க வேண்டும்”  எனவும் கூறியுள்ளார்.

muhammad mukhbar
muhammad mukhbar [file image]
மேலும், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் இன்று வருகை தந்தனர்.

வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர்  மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi