தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான VI, தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தங்களின் பயனர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது அதன் புதிய ரூ.948 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் விபரங்கள் குறித்து காணலாம்.
ரூ.948 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம்:
இந்த ரூ.948 திட்டத்தின் விலை, ரூ.699 ஆகும். இந்த திட்டத்தில் கூடுதலாக இரண்டு அம்சங்களை சேர்த்துள்ளதால் இதன் விலை ரூ.249 உயர்த்தப்பட்டு, தற்பொழுது ரூ.948-க்கு அறிமுகமாகியுள்ளது. இது பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இது இரண்டு இணைப்புகளுக்கான ஆதரவுடன் வருகிறது. இதன் கூடுதல் இணைப்பிற்கு ரூ.249 வசூலிக்கப்படுகிறது. ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம், கிழக்கு உத்தர பிரதேச பகுதிகளில் மட்டுமே அமலில் உள்ளது.
இந்த புதிய பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மூலம் அன்லிமிடேட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. இதன் இரண்டாம் கூடுதல் இணைப்பில் 30 ஜிபி அதிவேக டேட்டாவும் வழங்குகிறது. இந்த 30 ஜிபி டேட்டா முடிவடைந்ததும், இரண்டாம் நிலை பயனர்களுக்கு ஒரு ஜிபிக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும்.
டேட்டா சேவைகளை தவிர்த்து, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்.எம்.எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஒரு மாதத்திற்கான அமேசான் ப்ரைம், ஒரு வருடத்திற்கு ZEE5 பிரீமியம் மற்றும் Vi Movies and TV சந்தாக்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…