தளபதியின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குவதை தளபதியின் மகள் உறுதி செய்துள்ளார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனையடுத்து பல படங்களை தனுஷூடன் இணைந்து இயக்கி பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி தனஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மற்றும் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் இணைந்து காக்கா முட்டை உட்பட பல படங்களை தயாரித்தும் வெற்றியை பெற்றிருந்தது.
தற்போது இயக்குநர் வெற்றிமாறன் சூரி அவர்களை வைத்து ஒரு படத்தையும், சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார்.சமீபத்தில் இவர் விஜய் அவர்களுக்காக கதை எழுதும் பணியை ஆரம்பித்துள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் intru தனது பிறந்தநாளை கொண்டாடும் வெற்றிமாறன் அவர்களுக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் தளபதி விஜய்யின் மகளான திவ்யா அவர்கள் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, சூர்யாவுடன் ஆன வாடிவாசல் படத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், தனது அப்பாவுடனான அடுத்த புராஜெக்ட்டுக்காக செம வெயிட்டிங்கில் உள்ளதாக கூறியுள்ளார். இதிலிருந்து தளபதி 66 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் என்று கருதப்படுகிறது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…