அசுரனை அடுத்து பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவியை இயக்க உள்ள வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது இதனை அடுத்து சூரியை நாயகனாக வைத்து ஒரு கிரமத்து காமெடி படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்திற்க்கு இடையில் வெற்றிமாறன் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு ஆன்லைன் வெப் சீரிஸ் எடுக்க உள்ளார். இந்த வெப் சீரிஸில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இந்த வெப் சீரிஸை விக்னேஷ் சிவன், கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்காரா, மேலும் ஒரு தெலுங்கு பட இயக்குனர் சிறு சிறு பகுதிகளாக அவர்கள் பாணியில் இயக்க உள்ளனர். இந்த வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.