40 நாளில் சூரி படம்! அடுத்து சூர்யா படம்! 'அசுரன்' வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்!
அசுரன் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் யாரை இயக்க உள்ளார் என பல தகவல்கள் இருந்து வந்தன. இதில் காமெடி நடிகர் சூரியை வைத்து அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார்.
மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் எனும் கவிதை தொகுப்பிலிருந்து இப்படத்தை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படம் கிராமத்து காமெடி படமாக உருவாக உள்ளதாம்.
இப்படத்தை 40 நாளில் முடித்துவிடுவாராம். அதனை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் படத்தை இயக்க உள்ளார் எனவும், இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு இயக்க உள்ளார் எனவும், தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவை அடுத்து இயக்க உள்ள இயக்குனர்கள் என ஹரி, சிறுத்தை, சிவா, வெற்றிமாறன், பாலா, கவுதம் வாசுதேவ் மேனன் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. இதில் யாருடைய படத்தில் முதலில் நடிக்க உள்ளார் என திரையுலகமே காத்திருக்க்கிறது.