அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த அதிரடி! 'ஹீரோ' சூரியின் புதிய பட சூப்பர் அப்டேட்!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை தற்போது வெளியான அசுரன் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு பெற்றது பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை நாயகனாக வைத்து புதிய படம் எடுக்கப்போவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது அந்த படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியள்ளது. இப்படம் மறைந்த திரைப்பட பாடலாசிரியர் எழுத்தாளர் நா,முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் எனும் கவிதை தொகுப்பு நாவலை மையமாக வைத்து, வெற்றிமாறன் ஒரு புதிய கதைக்களம் உருவாக்கி வருகிறாராம். அந்த கதையை தான் சூரியை நாயகனாக வைத்து படமாக எடுக்க உள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.