இளையராஜாவுடன் இணைந்த வெற்றி மாறன்… புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒளிப்பதிவு..!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு இளையராஜா புதிய ஸ்டூடியோவில் இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரியை வைத்து நாவலை தழுவி ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தி சூரிக்கு தந்தையாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறாராம். அதைபோல் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஶ்ரீ நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். மேலும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் , இசையமைப்பாளர் இளையராஜாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டூடியோவில் இருந்து காலி செய்யுமாறு தெரிவித்தது. அதன்படி இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஸ்டூடியோவில் இளையராஜாவை அனுமதிக்காமல் ஸ்டுடியோ நிர்வாகம் அவரை வெளியேற்றியது.
அதற்கு பிறகு இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டும் பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து நேற்று இந்த ஸ்டூடியோ திறக்கப்பட்ட நிலையில், புதிய ஸ்டுடியோவில் வெற்றி மாறன் படத்திற்கு இசையமைக்கும் பணிகளை இளையராஜா தொடங்கியுள்ளார். ஸ்டூடியோவிற்கு நடிகர் சூரி, நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றி மாறன் ஆகியோர் சென்றுள்ளார்கள்.