பத்மஸ்ரீ விருதைப் பெற்றார் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி.!

Default Image

கலை, கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைளின் சேவைக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது, பத்ம விபூஷன், பத்ம பூஷன் , பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டிற்கான (2022) பத்ம விருதுகள் வழங்கும் விழா
டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். இதில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.

நடிகை சௌகார் ஜானகி  1950 இல் எல்வி பிரசாத் இயக்கிய தெலுங்குத் திரைப்படமான ஷாவுகாரு படத்தின் மூலம் பிரபலமானார் . இந்த படத்தின் மூலம் அவருக்கு ‘சௌகார்’ என்ற பெயர் கிடைத்தது. அதன்பிறகு 1960-களின் துவக்கத்திலேயே வரிசையாக பலத்திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். 70 ஆண்டுகளுக்கு மேலாக 400-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

புதிய பறவை திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார். இந்த படத்தில் மைக்கை பிடித்துக்கொண்டு “பார்த்த ஞாபகம் இல்லையோ… பருவ நாடகம் தொல்லையோ” என்ற பாடலுக்கு அவர் மேடையில் பாடுவதும் சிவாஜி அதிர்ச்சி அடைந்து பார்ப்பதும் அந்தக்காலத்தில் மிகவும் வரவேற்கப்பட்ட காட்சி. அப்போது போலவே இப்பொதும் அந்த காட்சிகளை ரசிகர்கள் ரசித்து பார்த்து உண்டு. இவர் கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. விருதை பெற்ற இவருக்கு ரசிகர்கள் நடிகர்கள், நடிகைகள் இணையத்தின் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்