பல்வேறு வசதிகளுடன் பாரம்பரிய பழைய வடிவில் வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்….
வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெஸ்பாவின் நம் பாரம்பரிய வடிவில் வளைந்த பாடி பேனல்கள் மற்றும் வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது.
முன்புறம் இன்டிகேட்டர்கள் அப்ரானில் பொருத்தப்பட்டுள்ளது.
- பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் இன்டிகேட்டர்களுடன் பொருத்தப்பட்டு இருக்கிறது.
- வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரில் பிரெஷ்லெஸ் டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
- இது அதிகபட்சம் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
- இந்த மோட்டாருடன் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
- ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் வெஸ்பா எலெட்ரிக்கா 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்கூட்டரில் இகோ மற்றும் பவர் என இரண்டு வகையில் உள்ளன.