வெள்ளிக்கோள் சோதனை-நாசாவின் புதிய 2 திட்டங்கள்..!

Default Image

பூமிக்கு அருகில் உள்ள வெள்ளிக்கோளினை பற்றி ஆய்வு செய்யவிருப்பதாக  நாசா அறிவித்துள்ளது.

வெளிக்கிரகத்தில் பூமியை போன்று முன்பு உயிர்வாழ ஏற்ற சூழல் இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால் வெள்ளிக்கிரகத்தில் இருக்கும் தட்பவெப்பநிலை மற்றும் புவியியல் தன்மையை பற்றி ஆய்வு செய்வதாக நாசா முடிவெடுத்துள்ளது. நாசாவின் இந்த இரு திட்டங்களுக்கு டாவின்சி மற்றும் வெரிட்டாஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

டாவின்சி திட்டத்தில் நாசா வெள்ளிக்கோளின் வரலாறு, இதன் தோற்றம், இங்கு கடல்கள் இருந்ததற்கு ஏதும் அடையாளம் இருக்கிறதா என்றும் மற்றும் இதன் புவியியல் தன்மை பற்றி அறிந்து கொள்ள சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

மேலும் வெரிட்டாஸ் திட்டத்தில் மூலம் வெள்ளிக்கோளின் புவியியல் முன்னேற்றம் மற்றும் பூமியிடமிருந்து எந்த வகையில் வெள்ளிக்கோள் வேறுபட்டுள்ளது என்பதையும் சோதனை செய்யும் வகையில் நாசா திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டத்திற்காக 500 மில்லியன் டாலர் நிதியை நாசா ஒதுக்கியுள்ளது. மேலும் டாவின்சி மற்றும் வெரிட்டாஸ் முறையே 2028 மற்றும் 2030 இல் ஆய்வு மேற்கொள்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்