திருப்பதியில் பண்டரிநாத அவதாரத்தில் எழுந்தளிருய கல்யாண வெங்கடேஸ்வரா்..!பிரம்மோற்சவ ஸ்பெஷல்
பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிநாத அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாா்.
பிரசித்தி பெற்ற திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் ஆண்டும் தோறும் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2 நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிநாதன் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளினார்.
திருப்பதியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில்.வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் 2ம் நாளான சனிக்கிழமை காலை சுவாமி பண்டரிநாதன் அவதாரத்தில் சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தாா். இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டும் ரசித்து வழிபட்டனர்.