வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி ரகுராம் அவர்களின் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படமும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படமும் Zee5 ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கும் ‘லாக்கப்’என்ற படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அறிமுக இயக்குனரான எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாக்கப். இந்த படத்தில் வைபவ் ஹீரோவாகவும், வாணிபோஜன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ளார். அரோல் கோரெல்லி இசையமைக்கும் இந்த படத்தை Zee5 தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…