தல அஜித்தின் 50-வது பிறந்தநாளில் அவரின் 50-வது படமான மங்காத்தா படத்தினை ரீ ரிலீஸ் செய்ய கோரி வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு தல அஜித்தின் 50-வது படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மங்காத்தா.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 எப்போது என்று கேட்டு வருகின்றனர்.
இப்படியிருக்க தல அஜித் தற்போது நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்காக ஒன்றரை வருட காலமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு நேற்றைய தினம் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் தல அஜித்தின் 50-வது பிறந்தநாள் தினமான மே 1-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தல அஜித்தின் 50-வது பிறந்தநாளில் அவரது 50-வது படமான மங்காத்தா படத்தினை ரீ ரிலீஸ் செய்யுமாறு இயக்குனர் வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார் .
அவர் பகிர்ந்த பதிவில்,தயா அழகிரி சார் வர மே 1-ம் தேதி தல அஜித்தின் 50-வது பிறந்தநாள்.எனவே நம்ம தல அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படத்தினை உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி ஏப்ரல் 30-ம் தேதி ரீ ரீலீஸ் செய்தால் ரசிகர்களான நாங்கள் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருப்போம் , பார்த்து செய்யுங்க என்று குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் தான் தல அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…