பொங்கல் 2022 எங்களுக்கு தல பொங்கல்.! – வலிமை படத்திற்கு காத்திருக்கும் வேம்புலி.!
பொங்கல் 2022 எங்களுக்கு தல பொங்கல் என நடிகர் ஜான் கோக்கன் ட்வீட் செய்துள்ளார்.
சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் இந்த படத்தில் நடித்துள்ளார். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் (Glimpse) நேற்று வெளியீடபட்டது. அதனை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வலிமை (Glimpse) பார்த்த ரசிகர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அருமையாக இருப்பதாகவும் படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில்,சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கோக்கன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வலிமை (Glimpse)-யை வெளியிட்டு காத்திருக்கேன் வாத்தியாரே 2022 பொங்கலுக்காக..பொங்கல் 2022.. எங்களுக்கு தல பொங்கல்.” என பதிவிட்டுள்ளார்.
காத்திருக்கேன் வாத்தியாரே 2022 பொங்கலுக்காக
Pongal 2022 …..Engalukku THALA PONGAL????????????????????????????????????????????????????
Love you Ajith Sir ❤❤❤❤❤
Watched Glimpses of #valimai for the millionth time. Just can’t get enough.#thalafan #thalafanforever #thalafanforlife #thalapongal2022 pic.twitter.com/lSW5jozH8x
— Highonkokken (@johnkokken1) September 24, 2021