வேலூர் கோட்டையில் நிரந்தரமாக காவல்துறை மூலம் ரோந்து மேற்கொள்ளப்படும் – வேலூர் மாவட்ட எஸ்பி
வேலூர் கோட்டையில் நிரந்தரமாக காவல்துறை மூலம் ரோந்து மேற்கொள்ளப்படும் என வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் பேட்டி.
வேலூர் கோட்டையில் ஹிஜாப் அணிந்த சில பெண்கள் தங்களது நண்பர்களுடன் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது பெண்களை வழிமறித்த ஒருவர் ஹிஜாபை கழற்றுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் அனுமதி இன்றி வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை அவர்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மற்றும் பகிர்ந்தவர்கள் என 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அளித்த பேட்டியில், வேலூர் கோட்டையில் நிரந்தரமாக காவல்துறை மூலம் ரோந்து மேற்கொள்ளப்படும். கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ எடுக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம். கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.