வெள்ளையான சருமம் பெற, தினம் இரவு இதை தடவினாலே போதுமாம்..!
நம்மில் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், அது நிறப்பிரச்சனை மற்றும் அழகு பிரச்சனை தான். நம்மூர் பெண்களின் துயர் துடைத்து அவர்களின் மனப்பாரத்தை குறைக்கவே இந்த பதிப்பு.
நிறம் குறைந்து சற்று கருப்பாக இருக்கும் பெண்கள் எதையாவது செய்து வெள்ளையாகி விட மாட்டோமா என்று பல வித முயற்சிகளை மேற்கொண்டு இருப்பர்; பற்பல விஷயங்களை முயற்சித்து பார்த்து இனி இது வேலைக்கு ஆகாது என்று சோர்ந்து போயிருப்பர். இப்படி முயற்சித்து பார்த்து சோர்வடைந்த பெண்களே! கவலை வேண்டாம்..
இந்த பதிப்பில் வெள்ளையான சருமத்தினை பெற, என்ன செய்ய வேண்டும் என்று படித்து அறிந்து உங்கள் கவலையை கலையுங்கள்..!
தேவையான பொருட்கள்
குறுகிய காலத்தில் வெள்ளையான சருமம் மற்றும் பொலிவான முகம் பெற தேவையான வெண்மைப் பொலிவூட்ட உதவும் ஜெல் அல்லது சீரம் தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை என்று இங்கு பார்க்கலாம்..
- 3 தேக்கரண்டி இயற்கை முறையில் விளைவித்த கற்றாழை
- 1 தேக்கரண்டி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ரோஸ் வாட்டர்
- 1 400 mg வைட்டமின் இ மாத்திரை
செய்முறை
மேற்கூறிய 3 பொருட்களையும் ஒன்றோடொன்று நன்றாக கலந்து சீரம் அல்லது ஜெல் பதத்திற்கு கொண்டு வரவும்.
இந்த கற்றாழை சீரம் அல்லது ஜெல் ஒரு மிகச்சக்தி வாய்ந்த நிறம் கூட்டும் சீரம் ஆகும்.
பயன்படுத்தும் முறை
- இவ்வாறு தயாரித்த கற்றாழை ஜெல்லை இரவு உறங்க செல்லும் முன், முகத்தில் மற்றும் உடல் பாகங்களில், புள்ளி புள்ளியாக வைத்துக் கொள்ளவும்.
- பின் புள்ளி வடிவில் இருக்கும் ஜெல் துளிகளை மெதுவாய் தொட்டு இணைத்து, மிருதுவான முறையில் உடலெங்கும் மசாஜ் செய்யவும்.
- மசாஜ் செய்வதனால், உடலெங்கும் இரத்த ஓட்டம் சீராவதோடு, சரும செல்கள் புதுப்பிக்கப்படும் முயற்சியும் உடல் செல்களால் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், முகம் மற்றும் உடலின் கருமை நிறம் நீங்கி, வெண்மை நிறம் மற்றும் பொலிவு உண்டாகும்.
பயன்கள்
கற்றாழையில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் முகத்தின் கருமையை போக்கி, வெண்மை நிறம் ஏற்படவும், வைட்டமின் இ மாத்திரை முதுமையை தள்ளிப்போட்டு, உங்களை என்றென்றும் இளமையாக வைத்திருக்கவும் உதவும். ரோஸ் வாட்டர் முகம் மற்றும் உடலை புத்துணர்ச்சியாகவும் குளிர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது.