வீரம் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அஜித் நடித்த விநாயகம் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகவும் தமன்னா நடித்த கோப்பெருந்தேவி கதாபாத்திரத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…