வரலாற்றில் இன்று(28.03.2020)… வேதாந்த மகரிஷி மறைந்த தினம் இன்று….
அனைவரும் அன்புசெலுத்தும் ஒருவர் என்ற ஒரு சிறந்த மனிதராக இர்ந்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆவர். இவர், கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன், முருகம்மாள் என்ற சின்னம்மாள் என்ற தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும், பக்தி கீர்த்தனைகளையும் கற்றுக் கொண்டார். இவரது குடும்பச்சூழலில் இவருக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே, தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான நெசவு தொழிலை செய்யத் தொடங்கினார். 18ஆவது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பின் அங்கு சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி.பின் படிப்படியாக உயர்ந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துன்பத்தைப் போக்கவும் பாடுபட்டார். வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது யார்? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன என்ற கேள்விகள் அவ்வப்போது அவரது மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். இவரின் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.