2 வருடங்கள் கழித்து 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற வாயாடி பெத்த புள்ள- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..!

Default Image

கனா திரைப்படத்தில் இடம்பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கியத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கனா. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினான் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளிவந்த வாயாடி பெத்த புள்ள பாடல் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்