வரலட்சுமி சரத்குமார், ஊரடங்கில் பேக்கிங் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமார், சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது கன்னிராசி, கிராக் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் . மேலும் இவரது நடிப்பில் டேனி என்ற படம் ஓடிடியில் தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் காட்டேரி, பாம்பன், சேசிங், பிறந்தால் பராசக்தி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்காமல், எந்த வித கதாபாத்திரத்தையும் துணிச்சலுடன் எடுத்து கொண்டு தைரியமாக நடிப்பவர்.சமீபத்தில் கூட சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் வில்லியாக நடித்து வரவேற்பைப் பெற்றார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர். வழக்கமாக பெண்களுக்கு எதிராக குரல் எழுப்பியும் வருகிறார். மேலும் அவரது சேவ் சக்தி அமைப்பின் மூலம் பலருக்கு உதவியும் வருகிறார். இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு பிசினஸை தொடங்கியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நான் LifeofPie என்ற ஒரு சிறிய பேக்கிங் நிறுவனத்தை தொடங்கியதாகவும், பொழுதுபோக்காக தொடங்கியது தற்போது பிசினஸ் ஆகி விட்டதாகவும், அதில் நான் எதிர்பாராத விதமாக 100 ஆர்டர்களை முடித்து விட்டேன் என்றும், என் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொரு நபருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…