லாஸ்லியாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்த வனிதா .!
லாஸ்லியாவிடம் வனிதா விஜயகுமார் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா . இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது பல படங்களில் நடித்து வரும் இவரது தந்தை மரியநேசன் திடீரென மரணமடைந்துள்ளார் . இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மேலும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களையும் , ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜயகுமார் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நான் லாஸ்லியாவுடன் பேசுனேன்.அவர் அழுது கொண்டு இருக்கிறாள் . ஆனால் அவர் மிகவும் மன உறுதியுடன் உள்ளதாகவும் , அவர் இலங்கைக்கு செல்வதற்கான முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அதற்காக விஜய் தொலைக்காட்சியும் இணைந்து இந்திய மற்றும் இலங்கை தூதரகத்துடன் பேசி லாஸ்லியாவை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார் . மேலும் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக உடனடியாக மரியநேசனின் உடலை கனடாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வர முடியாது என்றும், எனது அன்பையும் , ஆசீர்வாதத்தையும் லாஸ்லியாவிற்கு வழங்கியதாகவும் வனிதா குறிப்பிட்டுள்ளார்.
To all #Losliya fans …I spoke to her she is devastated and crying..but she will be strong she’s trying to fly to srilanka.arranging thru embassy @vijaytelevision team is with her.due to covid pandemic the body can’t reach srilanka immediately.ive given her my love and blessings https://t.co/nWMvNV9Xms
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 16, 2020