மூன்றாம் திருமணம் குறித்து அறிக்கை வெளியிட்ட வனிதா.!
நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மூன்றாம் திருமணத்தை பற்றி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். இவர் அதை தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமாகி மக்களில் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் டைட்டிலையும் தட்டி சென்றார். தற்பொழுது யூடியூப் சேனலை தொடங்கி பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கு வரும் ஜூன் 27ம் தேதி பீட்டர் பவுல் என்பவருடன் மூன்றாவது முறையாக திருமணம் செய்யவிருப்பதாக நேற்று சமூகவலைத்தளத்தில் செய்திகள் வைரலானது இதனை உறுதிபடுத்தும் வகையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு திருமணத்தை உறுதிபடுத் தியுள்ளார்,குறிப்பாக அதில் அவர் கூறியது ” அனைவருக்குமே காதலில் மறு வாய்ப்பு தேவைப்படும், அப்படி எனக்கு கிடைத்தவர் தான் பீட்டர் பால் ” என குறிப்பிட்டுள்ளார்.