விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள அவரது 60 வது படத்தில் நடிகை வாணி போஜன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 60 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் மற்றும் நடிகரான துருவ் விக்ரமும் இணைந்து நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. கேங்க் ஸ்டார் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ள்ளார். மேலும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை வாணி போஜன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…