பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கான படப்பிடிப்பை முடித்து விட்டதாக வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி அறிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, லால், ஜெயராம், ரஹ்மான், சரத்குமார், பார்த்திபன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜெயம்ரவி தனக்கான படப்பிடிப்பை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி முடித்தார். இந்நிலையில், ஜெயம்ரவியை தொடர்ந்து வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி தனக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்தி தனத்தி ட்வீட்டர் பக்கத்தில் “இளவரசி த்ரிஷா நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசேசசசசச ஜெயம் ரவி என் பணியும் முடிந்தது” என இதன் மூலம் தனக்கான காட்சிகளை படமாக்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வடமாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு அரண்மனைகளில் செட் அமைத்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…