தளபதி 66 படத்தை இயக்கும் வம்சி..?? அவரே கூறிய தகவல்..!!

Default Image

இயக்குனர் வம்சி படிபல்லி விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவது உண்மைதான் என்று கூறியுள்ளார். 

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ள நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.தற்போது கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படத்திற்கான படப்பிடிப்பு தள்ளி சென்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி படிபல்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.

இது குறித்து வம்சி படிபல்லி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது , “விஜய் திரைப்படத்தை நான் இயக்கவிருப்பது உண்மைதான். அந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். எனது படங்களிலேயே பெரும் பொருட்செலவில் தயாராகவுள்ளது. என்றும் கூறியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வருகிறது.  ஆனால் அது தளபதி 66 அல்லது தளபதி 67 என்ற தகவலை அவர் கூறவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIve 2 - BJP - TVK
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat