பைக் ஸ்டண்ட் காட்சிகளுடன் தயாராகும் வலிமை டீசர்.!
வலிமை திரைப்படத்தின் டீசர் குறித்த புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
நடிகர் அஜித் குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படத்தை தீபாவளிக்கு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வலிமை திரைப்படத்தின் டீசர் ரெடியாகி வருவதாகவும், முற்றிலும் வலிமை ️ டீசறில் பைக் ஸ்டண்ட்களுக்காக இருக்கும் எனவும், டீசருடன் படம் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.