தல 60! வலிமை எப்போது ஆரம்பிக்கிறது என தெரியுமா?!

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
இந்த படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டது. இதில் இயக்குனர் வினோத், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் நிராவ் ஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படம் முழுக்க ஆக்சன் கதைக்களமாக எடுக்கப்பட உள்ளதாம். இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் எனவும், நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் டிசம்பரில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.