இணையத்தை கலக்கும் ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!
வலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது சவுத் ஆப்பிரிக்காவில் நடத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் கிடையாய் கிடக்கின்றனர் .சமூக வலைத்தளங்கள் அப்டேட் கேட்டு வரும் தல ரசிகர்களுக்கு படப்பிடிப்பு தளத்திலிருந்து கசியும் புகைப்படத்தை டிரெண்ட் செய்து வைரலாக்கி நிம்மதி தேடி வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வலிமை படத்தின் புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.அதனை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.
Exclusive SNAP of #HVinoth From #Valimai Spot ????
Stay Tuned To @ValimaiFilmPage pic.twitter.com/hStRZSZRQw
— #Valimai (@ValimaiFilmPage) January 29, 2021