தல அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை இயக்குனர் H.வினோத் இயக்கவுள்ளார். நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
ஆனால், நடிகர்களின் தல அஜித்தை தவிர மற்ற நடிகர் நடிகைகளை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படம் ஆரம்பிக்கும் போது கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், அதற்காக தற்போது வரையிலும் சூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை.
இயக்குனர் வினோத் தற்போது வரை படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறாராம். அந்த வேலைகள் முடிந்து டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் தான் ஷூட்டிங் தொடங்கும், அப்போதுதான் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரமும் வெளியே வரும். அநேகமாக இப்படத்தை ஜனவரியிலிருந்து ஆரம்பித்து படத்தை அடுத்த வருட தீபாவளிக்கு வெளிக்கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…