வலிமை திரைப்படத்தின் இரண்டாம் பாடல் யுவன் ரெடி செய்து விட்டார் சீக்கிரம் வரும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுவென நடந்தது வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
படத்திலிருந்து மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த 2-ஆம் தேதி அடுத்ததாக படத்திலிருந்து “நாங்க வேற மாறி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூடியூபில் 16 மில்லியன் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இதனையடுத்து படத்தின் இரண்டாவது பாடலுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் என்று கேட்டதற்கு ” வலிமை இரண்டாம் பாடல் யுவன் ரெடி செய்து விட்டார் சீக்கிரம் வரும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…