வலிமை திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.!

Default Image

வலிமை திரைப்படத்தின் இரண்டாம் பாடல் யுவன் ரெடி செய்து விட்டார் சீக்கிரம் வரும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுவென நடந்தது வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்திலிருந்து மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  கடந்த 2-ஆம் தேதி அடுத்ததாக படத்திலிருந்து “நாங்க வேற மாறி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூடியூபில் 16 மில்லியன் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதனையடுத்து படத்தின் இரண்டாவது பாடலுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் என்று கேட்டதற்கு ” வலிமை இரண்டாம் பாடல் யுவன் ரெடி செய்து விட்டார் சீக்கிரம் வரும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்