தல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் பல பிரபலங்களிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.இதனை கண்டித்து தல அஜித் வெளியிட்ட அறிக்கையில் சரியான நேரத்தில் வலிமை அப்டேட் வெளிவரும் என்றும்,இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை அப்டேட் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது வலிமை படத்தினை திரையரங்குகளில் ரிலீஸ் செய்த இரண்டே வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கான பேச்சுவார்த்தையை அமேசான் பிரைம் உட்பட இரண்டு முன்னணி ஓடிடி நிறுவனங்கள் வலிமை படக்குழுவினருடன் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் திரையரங்குகளில் வெளியாகிய இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியாகியதும், அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.தற்போது வலிமை படத்தினையும் அதே பாணியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…