#CinemaBreaking:அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக்.! போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Published by
Ragi

அஜித்தின் 50-வது பிறந்தநாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் பல பிரபலங்களிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.இதனை அஜித் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.எனவே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதாவது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தல அஜித்தின் 50-வது பிறந்தநாளான மே 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.இது தல ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒரு வருட காலமாக வலிமை அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தல ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 

Published by
Ragi

Recent Posts

“காலங்கள் பேனாலும் பேசும்”…அன்று ரோஹித் இன்று ஷ்ரேயாஸ்! அணிக்காக செய்த தியாகங்கள்!

“காலங்கள் பேனாலும் பேசும்”…அன்று ரோஹித் இன்று ஷ்ரேயாஸ்! அணிக்காக செய்த தியாகங்கள்!

அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல்…

36 minutes ago

“இந்தியாவை போல அமெரிக்காவில் தேர்தல் நடத்தனும்.,” டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள…

1 hour ago

உனக்குள் இப்படி ஒரு திறமையா? மோனோஜை பார்த்து கண்ணீரை விட்ட தந்தை பாரதிராஜா!

சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை…

2 hours ago

“அதிமுக – பாஜக கூட்டணி பற்றி பேசவேயில்லை!” இபிஎஸ் திட்டவட்டம்!

டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள்…

2 hours ago

“என்னுடைய சதத்தை பற்றி யோசிக்காத” ஷ்ரேயாஸ் சொன்ன விஷயம்…ஷஷாங்க் சிங் எமோஷனல்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் முடியாது.…

3 hours ago

ஆவுடையார் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு நிதி எவ்வளவு? முதல்வர் ஸ்டாலின் பதில்!

சென்னை : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில்…

3 hours ago