முக்கிய சண்டைக்காட்சிகாக ரஷ்யா செல்லும் வலிமை படக்குழு.!

Default Image

வலிமை படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகாக படக்குழு ரஷ்யா செல்லவுள்ளனர். 

நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். படத்திலிருந்து வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், வலிமை படத்தின் முக்கிய சண்டைக்காட்சி மட்டுமே இன்னும் படமாக்கப்படவுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்கப் படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முக்கிய சண்டைக்காட்சி மட்டும் முடிந்து விட்டால், வலிமை படத்தின் அணைத்து படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்