அண்ணாத்த வெளியாகும் தேதியில் வலிமை வெளியீடு..??

Default Image

தீபாவளி தினத்தன்று அஜித் நடித்த வலிமை படமும் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படமும் வெளியாகவுள்ளதாக தகவல். 

 நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது திரும்பினார். இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

இதனை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இந்த வலிமை திரைப்படமும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேட்ட விஸ்வாசம் திரைப்படங்களை தொடர்ந்து அஜித் ரஜினி திரைப்படம் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin