காதலர் தின ஸ்பெஷல்: காதலை கொட்டி தீர்க்கும் பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ .!
காதலர் தினத்தை முன்னிட்டு பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படத்திலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் .
பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ஆதிபுருஷ் ,ராதே ஷியாம்,சலார் என சில படங்களில் கமிட்டாகியுள்ளார் .இதில் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரீ டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை ராதா கிருஷ்ணா குமார் இயக்குகிறார் .இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர் ,முரளி சர்மா ,ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படமானது 70களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ராதே ஷியாம் படத்திலிருந்து முன்னோட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த புரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
This Valentines, let us celebrate love with the biggest announcement of the year! ???? #RadheShyam to release in a theatre near you on 30th July! ???????? #ValentinesWithRS
Telugu : https://t.co/LmedWoCyPm
Hindi : https://t.co/J0fA1tqwm4
Tamil : https://t.co/MHJWiBOOmR— Radha Krishna Kumar (@director_radhaa) February 14, 2021