நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு( நவம்பர் 14) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.இந்தாண்டு வெளியாக உள்ள வலிமை திரைப்படம் தொடர்பாக எந்த தகவலும் இன்னும் வெளியாகமலே இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு (நவம்பர் 14) தேதி படம் வெளியாகும் என்று படக்குழு வட்டாரத்தில் இருந்து அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாக படம் வெளியாக உள்ளது.
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது நவம்பர் 12ந்தேதியே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.எதற்கு இந்த மாற்றம் என்றால் அதில் ஒரு செண்டிமெண் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பொதுவாக நடிகர் அஜித்துக்கும் ‘வி’ செண்டிமெண்டும் அதிக ஒத்துமைகள் உள்ளன கடந்த காலங்களில் எல்லாம்’வி’ என்று தொடங்கும் படங்களில் பெயர்களில் நடித்து கொண்டிருந்த அஜித் நேர்கொண்ட பார்வை மூலமாக கூறப்பட்டு வந்த செண்டிமெண்ட் உடைந்தது என்று சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் எல்லாம் வெள்ளிக்கிழமைகளில் தான் வெளியாகும். ஆனால் அஜித் படங்களுக்கு மட்டும் விதிவிலக்கே. காரணம் பெருமாலும் அஜித்தின் படங்கள் பொதுவாக வியாழக்கிழமை தான் வெளியிடப்படும். அதை உறுதி செய்கின்ற வகையில் தான் வலிமை தேதி மாற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது.
தீபாவளி நாளான நவ.,14ம் தேதி சனிக்கிழமை வலிமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு இரண்டு தினத்திற்கு முன்னதாகவே நவ., 12ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று தகவல் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…