நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய வைரமுத்து..!!
கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கியுள்ளார்.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5லட்சம் வழங்கியுள்ளார். இதனை அவர் ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதில் ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5லட்சம் வழங்கினேன். மனம்விட்டு உரையாடினோம். முதலமைச்சர் பண்பாட்டில் பழுத்திருக்கிறார்; நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார். செயல் குறித்தே திட்டமிடுகிறார்; நாடுகாக்கத் துடிக்கும் நல்லவரை வாழ்த்தினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினைச் சந்தித்து
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு
ரூபாய் 5லட்சம் வழங்கினேன்.மனம்விட்டு உரையாடினோம்.
முதலமைச்சர் பண்பாட்டில் பழுத்திருக்கிறார்;
நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார்;
செயல் குறித்தே திட்டமிடுகிறார்;
நாடுகாக்கத் துடிக்கும்
நல்லவரை வாழ்த்தினேன். pic.twitter.com/rdyV4oxw1J— வைரமுத்து (@Vairamuthu) May 15, 2021