ரீ என்ட்ரிக்கு கண்டிஷன் போட்ட வைகைப் புயல்.! மிரண்ட தயாரிப்பாளர்.!
வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக ஒரு எபிசோடிற்கு ரூ. 50லட்சம் சம்பளமாக கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .இவரை அடுத்து சந்தானம், சூரி, யோகிபாபு என பலர் காமெடியனாக வந்தாலும் இவரது இடத்தை யாராலும் பிடிக்க இயலவில்லை என்றே கூறலாம். பெரிதாக படங்களில் இவரை காணவில்லை என்றாலும் ரசிகர்கள் இவரை விடுவதாக இல்லை, இவரின் நகைச்சுவை கலந்த நடிப்பினை பார்க்க பலரும் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இளம் இயக்குநர் ஒருவர் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் வடிவேலு அவர்களை நடிக்க வைக்க, தயாரிப்பு நிறுவனம் வடிவேலுவிடம் அணுகியுள்ளது. முழுக்க முழுக்க காமெடி கலந்த அந்த வெப் சீரிஸ் 8 எபிசோட்களை கொண்டதாம். அதில் ஒரு எபிசோடிற்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக வடிவேலு கேட்டுள்ளாராம். இதனை கேட்ட தயாரிப்பு நிறுவனம் மிரண்டு போனதோடு வெப் சீரிஸ் தயாரிக்கும் முடிவையே கைவிட்டதாக கூறப்படுகிறது.