வடிவேலு அவர்கள் எலி என்ற திரைப்படத்தை அடுத்து சுராஜ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவிற்கு வில்லனாக வடிவேலு அவர்கள் நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனையடுத்து கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், எலி, தெனாலிராமன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரசிகர்களை சிரிக்க வைக்க ரெடியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் கடைசியாக கத்தி சண்டை என்ற படத்தின் மூலம் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை, விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…