தல அஜித்தின் வலிமை படத்தில் வடிவேலு இருக்கிறாரா? இல்லையா? உண்மை நிலவரம்!

Default Image

தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் இயக்க உள்ளார். போனி கபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க உள்ளாராம்.
இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.  இப்படத்தின் வடிவேலு நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி வந்தது. மேலும் இவர்கள் ராஜா படத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்கள் என தகவல் வெளிவந்தது.
வடிவேலு ஏற்கனவே ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடிக்காமல் இருக்கிறார். ஒன்று அப்படத்தில் நடித்து தரவேண்டும் இல்லையென்றால் வாங்கிய அட்வான்சை திருப்பி தர வேண்டும் அதுவரை மற்ற படங்களில் அவர் நடிக்க கூடாது என நடிகர் சங்கத்தில் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம். அதுவரை அவர் மற்ற படங்களில் நடிக்க முடியாது என்ற நிலை தற்போது நிலை வருகிறதாம். இந்த நிலையில் அவர் வலிமை படத்தில் இருக்கிறார் என்ற தகவல் இன்றுவரை உறுதி வலிமை படக்குழுவால் உறுதி செய்யப்படவில்லை.
மேலும், ராஜா படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகர் வடிவேலுவுக்கும், அஜித்திற்கும் இடையே மனஸ்தாபம் உண்டானதாம்.  அதனால்தான் இருவரும் அதற்கடுத்தது இணைந்து நடிக்கவில்லை எனவும் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர். இதுபோல கமல்ஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் வடிவேலு கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்திற்கு இன்னும் சூட்டிங் ஆரம்பிக்கவில்லை ஆரம்பித்தால் தான் வடிவேலு மீதான பிரச்சனைகள் விஸ்வரூபமெடுக்கும் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
earthquake
jeyakumar TVKVijay
TVK Leader Vijay speech in TVK general committee meeting
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna