நடிகர் வடிவேலு தனது பெயரை கெடுக்கும் வகையில் பேசியதற்காக நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோரின் மீது புகார் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார்.இந்த நிலையில் சமீப காலமாக இவருக்கும் நடிகர் சிங்கமுத்துவிற்கும் பல பிரச்சனைகள் நடந்து வந்தது. இருவருமே ஒருவருக்கொருவர் தாக்கி வந்த நிலையில், சமீபத்தில் நடிகரான மனோபாலா அவர்கள் சிங்கமுத்து அவர்களை பேட்டி எடுத்துள்ளார்.
அப்போது வடிவேலு அவர்களை குறித்து பல தகவல்களை கூறியுள்ளார் அதில் வடிவேலுவை அவர் தான் ஆளாக்கி விட்டதாகவும், வடிவேலு அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றும், அவருக்கு இடம் எல்லாம் வாங்கி கொடுத்து பெரியாள் ஆக்கி விட்டது நான் தான் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வடிவேலு தன்னுடைய பெயரை தேவையில்லாமல் பயன்படுத்தி கெடுக்கும் வகையில் பேசியதற்காக மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் மீது புகார் செய்துள்ளார். தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…