உலகநாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை பாராட்டும் விதமாக கடந்த ஞாயிற்று கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட வடிவேலு, கமல்ஹாசனுடனான தனது நெகிழ்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறும்போது, ‘ வடிவேலு , கமலுடன் சிங்காரவேலன் படத்தில் நடித்து வந்துள்ளார். அப்போது வடிவேலுவின் நடிப்பை பார்த்து கமல் அழைத்து, தான் அடுத்து சொந்த படம் ( தேவர் மகன் ) எடுக்கிறேன். அதனால் நாளை காலை ராஜ்கமல் அலுவலகம் சென்று மேலாளரை பார். என கூறியுள்ளார். உடனே வடிவேலு, மறுநாள் வேறு யாரும் வந்துவிடக்கூடாது என முந்தின நாள் இரவே ராஜ்கமல் அலுவலகம் சென்று மேலாளரை பார்த்துவிட்டார். அங்குள்ள மேலாளர் கமலை தொடர்புகொண்டு பின்னர், தேவர் மகன் படத்தில் நடிப்பதற்காக 5000 ருபாய் செக் கொடுத்து அனுப்பியுள்ளார்.
இந்த நிகழ்வை அடுத்து, கமல், வடிவேலுவிடம், உன்னை நான் விடிந்த பின் காலையில் தானே பார்க்க சொன்னேன் . நீ எதற்க்கு விடிவதற்குள் சென்று பாரத்தாய் என கேட்டுள்ளார். அதற்க்கு வடிவேலு, எனக்கு நேற்று நீங்கள் நடிக்க அழைத்ததும் விடிந்து விட்டது அதனால் தான் நேற்று இரவே ராஜ்கமல் நிறுவனம் சென்றுவிட்டேன் என கமலிடம் வடிவேலு நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை மேடையில் கூறி உணர்ச்சிவசப்பட்டார் நடிகர் வடிவேலு. மேலும் அடுத்து கமலின் தலைவன் இருக்கிறான் படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…