யோசனை இருக்கு! இப்போதைக்கு வாய்ப்பில்லை! – வைகைப்புயல் வடிவேலுவின் மாஸ்டர் பிளான்!
- தமிழ் திரையுலகில் தற்போதும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த காமெடி நடிகர்களில் வடிவேலு முக்கியமானவர்.
- இவர் இணையதள வெப் சீரிஸில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் அது வெறும் வதந்தி என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சில வருடங்களாக அதிக படங்களில் நடிக்காமல் இருந்தாலும், இணையதளத்தில் இவரை சிலாகிக்காத தமிழ் சினிமா ரசிகர்கள் வெகு சிலரே. அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் இப்போதும் இவருக்கான இடம் காத்துக்கொண்டிருக்குகிறது.
இவர் வெப் சீரிஸில் களமிறங்க உள்ளார் என தகவல் பரவி வந்தது. இதன் உண்மை நிலை என்னவென்றால், நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான் கமல்ஹாசன் நடித்து இயக்க உள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பிறகு தமிழசினிமாவில் தனது பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என கூறுகிறார். இணையத்தில் களமிறங்க ஆர்வமாகதான் இருக்கிறார். ஆனால் அந்த எண்ணம் தற்போதைக்கு வடிவேலுவிற்கு இல்லை என தகவல் வெளியகியுள்ளது, அதனால் மீண்டும் தமிழசினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த முனைப்புடன் செயல்பட்டுவருகிறார் வைகைப்புயல் வடிவேலு.